தமிழகம் சினிமா

தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை.! இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை! நடிகர் விவேக் அசத்தல்!

Summary:

actor vivek talk about chennai

சென்னைக்கு சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருப்பவர்களும் பேசிக்கொள்வது வழக்கம். அதேபோல் சென்னைக்கு வந்தவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கொடுத்து, நல்ல வருமானத்தையும் கொடுத்து, வந்தாரை வாழவைக்கும் நகரமாக சென்னை இருந்துவருகிறது.

ஆனால் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொடூர வைரஸான கொரோனா உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலே சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும்  தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,504 - ஆக அதிகரித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,244 - ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா ஹாட் ஸ்பாட்டாக சென்னை மாறியுள்ள நிலையில் பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை குறித்து நடிகர் விவேக் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், "எல்லோரும் கழிவிரக்கம், அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள். பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர். தலைநகர்! பல மொழி, இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை. அது மீளும்; வாழும்! என்று நடிகர் விவேக் பதிவு செய்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement