பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
ஆந்திராவிற்கு கோவிலுக்கு சென்ற தமிழக பயணிகள்.! திடீரென ஏற்பட்ட விபத்து.! துடிதுடித்து இறந்த பயணிகள்.!
ஆந்திரமாநிலம் நெல்லூர் அருகே புஜ்ஜிரெட்டிப் பாளையத்தில் லாரி மீது வேன் மோதியதில் 5 பெண்கள் உள்பட்ட 8 நபர்கள் உயிரிழந்தனர்.
ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமியை தரிசனம் செய்ய தமிழகத்திலிருந்து 15 பேர் டெம்போ வேனில் சென்றுள்ளனர். சாமி தரிசனம் முடிந்து நெல்லூர் திரும்பிக் கொண்டிருந்த போது புச்சிரெட்டிபாளையம் எனும் பகுதியில் மும்பை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியது.
லாரி மீது வேன் மோதியதில் 5 பெண்கள் உட்ப்ட 8 நபர்கள் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 8 பேருக்கு நெல்லூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அங்கு ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் சென்னை மற்றும் பெரம்பூரைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. சாலை விபத்தில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.