ஏ.சி வெடித்து 3 பேர் பலியான சம்பவத்தில் திடீர் சந்தேகம்! போலீசாரின் கிடுக்குபிடி விசாரணை!

AC busted


AC busted


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜி. இவருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். அதில் ஒரு மகனுக்கு மட்டும் திருமணம் நடந்துள்ளது. 

இந்தநிலையில் கடந்த 14-ஆம் தேதி இரவு ராஜியின் முதல் மகன் கோவர்த்தனனும், மருமகள் தீபகாயத்திரியும் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கியுள்ளனர். ராஜி தனது மனைவி மற்றும் 2-வது மகனுடன் மற்றொரு அறையில் படுத்து தூங்கினர். மறுநாள் அதிகாலையில் கலைச்செல்வியும், கவுதமும் அறையில் உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தனர்.

அதே போல் ராஜி, அவரது வீட்டின் வராண்டா பகுதியில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த  திண்டிவனம் போலீசார் விரைந்து வந்து, 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

AC busted

இதுகுறித்து கோவர்த்தனன் போலீசாரிடம் கூறுகையில், 6 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.சி. வாங்கியதாகவும், இதுவரை அதை சர்வீஸ் செய்யவில்லை எனவும், இதனால் தான் மின்கசிவு ஏற்பட்டு, ஏ.சி. வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறினார்.

ஆனால் ஏ.சி. வெடித்த அறையில் 2 மண்எண்ணெய் கேன், ரத்தக்கறை, கழிவறையில் இருந்த வாளியில் பெட்ரோல் வாசனை போன்றவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

ராஜியின் மூத்த மகனான கோவர்த்தனன் மற்றும் சில உறவினர்கள் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே இது தொடர்பாக முழுமையாக விசாரிக்க வேண்டும் என  போலீசாரிடம் கூறப்பட்டது. இதனையடுத்து கோவர்த்தனனை காவல் நிலையத்தில் தனி அறையில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.