மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
காதல் தோல்வியால் விபரீதம்? விடுதியில் தூக்கில் தொங்கிய திருவண்ணாமலை மாணவர்.!

திருவண்ணாமலை மாவட்டம், தொண்டமானுர் கிராமத்தில் வசிப்பவர் சுதேசி (வயது 19). தற்போது சென்னை திருவல்லிக்கேணி அரசு விடுதியில் தங்கியிருந்தபடி, பிரசிடன்சி கல்லூரியில் பயின்று வருகிறார்.
நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர், மாலையில் விடுதிக்கு வந்துள்ளார். பின் அவரின் நண்பர்கள் அறைக்கு வந்தபோது, அறைக்குள் சுதேசி மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: நிச்சியிக்கப்பட்ட மணமகனுடன் டூவீலரில் அதிவேக பயணம்.. 23 வயது மணப்பெண் பரிதாப பலி.!
காதல் தோல்வி தற்கொலை
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சுதேசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையில் அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
அவர் சொந்த ஊரில் பெண் ஒருவருடன் காதல் வயப்பட்டு பேசி வந்த நிலையில், சில நாட்களாக இருவருக்கும் பேச்சுவார்த்தையில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் விரக்தியில் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Watch: பால் குடிக்க வந்தது குத்தமா? கேனில் தலை சிக்கி தவித்துப்போன நாய்; பத்திரமாக மீட்ட அதிகாரிகள்.!