நிச்சியிக்கப்பட்ட மணமகனுடன் டூவீலரில் அதிவேக பயணம்.. 23 வயது மணப்பெண் பரிதாப பலி.!



Tiruvannamalai Chetpat bride Girl Dies before Wedding during bike Ride 

 

எதிர்கால கணவருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளம்பெண், இளைஞரின் அதிவேகம் காரணமாக தலையில் படுகாயமடைந்து திருமணத்திற்கு முன்பாகவே உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு, கொழப்பலூர் கிராமத்தில் வசித்து வருபவர் நடேசன். இவரின் மகள் தேன்மொழி (வயது 23). இதே பகுதியில் வசித்து வருபவர் ஜெகநாதன் (வயது 27). ஜெகநாதன் - தேன்மொழி ஆகியோருக்கு திருமணம் செய்ய சமீபத்தில் நிச்சயம் நடத்தி முடிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: Watch: பால் குடிக்க வந்தது குத்தமா? கேனில் தலை சிக்கி தவித்துப்போன நாய்; பத்திரமாக மீட்ட அதிகாரிகள்.!

இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க காத்திருந்த ஜோடிகள், நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சேத்துப்பட்டு - ஆரணி சாலையில் சென்றுகொண்டு இருந்தது. அப்போது, ஜெகநாதன் வாகனத்தை வேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது. 

Tiruvannamalai

விபத்தில் தலையில் படுகாயம்

இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்த தேன்மொழி, தலையில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு ஆரணி அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டவர், அன்று இரவில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் அன்றைய இரவிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சேத்துப்பட்டு காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: மின்கசிவால் பகீர்; திடீரென வெடித்து சிதறிய ஏசி மெக்கானிக் கடை.. தீப்பிழம்பை கண்டு தெறித்தோடிய மக்கள்.!