தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி.! அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட புதிய தகவல்!



5-positive-cases-found-in-tamilnadu

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 562பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் வைரஸ் தொற்று 18ஆக இருந்தது. மேலும் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.  மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

tamilnadu

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனோ வைரஸ் தொற்று மேலும் 5பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்  தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.  இந்தோனேசியாவை சேர்ந்த நான்கு பேருக்கும், சுற்றுலா வழிகாட்டியான சென்னை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.