தமிழகம்

பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் கிடந்த 4 சடலங்கள்.! வெளியான நெஞ்சை உறைய வைக்கும் பகீர் காரணம்!!

Summary:

4 family members commits suicide for moneyissue

புதுச்சேரியில் ஆரோ என்ற பகுதியில் வசித்துவந்தவர் சுந்தரமூர்த்தி. அவரது மனைவி மகேஸ்வரி.அவர் ஆரோ பவுண்டேஷனில் பணிபுரிந்து வந்தார். சுந்தரமூர்த்தி மற்றும் மகேஸ்வரி தம்பதியினருக்கு இருமகள்கள் உள்ளனர்.அவர்களில் மூத்தமகள் கிருத்திகா பன்னிரண்டாம் வகுப்பும்,  இளைய மகள் சமிக்ஷா எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்களது உறவினர்கள் மகேஸ்வரியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதனை தொடர்ந்து நேற்றும் அவர்களுக்கு போன் செய்துள்ளனர். ஆனால் அப்பொழுது சுந்தரமூர்த்தி மற்றும் மகேஸ்வரி இருவரது போனும் அணைக்கப்பட்டிருந்தது.மேலும் பல தடவை போன் செய்த போதும் யாரும் பேசவில்லை.

 இந்நிலையில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் இது குறித்து பொலிசாருக்கு தகவலளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுந்தரமூர்த்தி அவரது மனைவி மற்றும் இருமகள்கள் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்களது உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தீராத கடன் பிரச்சினையால் அனைவரும் சாப்பாட்டில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


Advertisement