தமிழகம் Covid-19

பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவுக்கு பலியான சோகம்!

Summary:

25 days child died in corona

சீனாவில் இருந்து ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 65 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 1765ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தைக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி எழும்பூரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த குழந்தையை தாயிடமிருந்து தனிமைப்படுத்திய மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். அனாலும் குழந்தை சிகிச்சைபலனின்றி உயிரிழந்தது.


Advertisement