தமிழகம்

12 ஆம் வகுப்பு மாணவியுடன் உல்லாசம்! பெற்றோருக்கு தெரியாமல் 6 மாதம் கர்ப்பம்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.

Summary:

பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளன்னர்.

பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளன்னர்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக அடிக்கடி அவருக்கு வயிறுவலிவரவே அவரது பெற்றோர் பரிசோதனைக்காக மகளை அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துசென்றுள்ளன்னர்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து மகளிடம் விசாரித்ததில், பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த 18 வயது இளைஞர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி, தன்னுடன் அடிக்கடி உறவு வைத்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

இதனை அடுத்து அப்பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணும், இளைஞரும் காதலித்துவந்ததாகவும், திருமணம் செய்துகொள்வதாக கூறி, அந்த பெண்ணை அடிக்கடி தனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச்சென்று உல்லாசமாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.


Advertisement