தமிழகம்

வீட்டில் இருந்தே குறைகளை தெரிவிக்கலாம்.. தமிழக அரசின் உதவிக்கு 1100 சேவை எண்!

Summary:

தமிழக அரசின் உதவியை பெற 1100 சேவை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்க

தமிழக அரசின் உதவியை பெற 1100 சேவை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

1100 என்ற சேவை எண் மூலம் மக்கள் வீட்டில் இருந்தபடியே தமிழக அரசின் உதவிகளை பெறலாம் எனவும், அதிகாரிகள் பார்த்து மனு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தமிழக முதல்வர் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த சேவை மையத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். அனைத்து குறைதீர்க்கும் அமைப்புகளும், 1100 உதவி மையத்தில் ஒருங்கிணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement