தர்மசாஸ்தா என சபரிமலை ஐயப்பனை கூறுவது ஏன் தெரியுமா.?!

தர்மசாஸ்தா என சபரிமலை ஐயப்பனை கூறுவது ஏன் தெரியுமா.?!



Sabarimalai iyappan why calling as dharma sastha

சபரிமலையில் புலியை வாகனமாகக் கொண்டு தவக்கோலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருபவர் ஐயப்பன். அரக்கி மகிஷியை வதம் செய்வதற்காக பிறப்பெடுத்த அவதாரம் தான் ஐயப்பன். 

பிற கடவுள்களுக்கு மாலை போட்டு விரதம் இருந்து வழிபடுவதை விட ஐயப்பனை வழிபட அதிகப்படியான விதிமுறைகள் இருப்பதால் இது மிகவும் கடினமான விஷயமாகும். 

Dharmasastha

ஆனாலும் கூட ஐயப்பனுக்காக மாலை போட்டு சபரிமலை செல்கின்ற பக்தர்கள் மிக அதிகம். சாஸ்தா எனும் வார்த்தைக்கு உன்னதமாக ஆள்பவர் என்று அர்த்தம். அதாவது, தவறு செய்தால் சரியான முறையில் அவர்களுக்கு தண்டனை கொடுப்பவர் என்று அர்த்தம். 

ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைக்க காரணம் அவர் தர்மத்தை நிலைநாட்டி ஆள்கிறார் என்பதற்காக தான். 

Dharmasastha

மனித வாழ்க்கையின் ஆணிவேராக இருப்பது தர்மம். இது இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. பகவத் கீதையில் சொல்லப்பட்டிருப்பதும் இதுதான். 

தர்மத்தை காத்து ஆள்பவராக ஐயப்பன் இருப்பதால் அவரை தர்மசாஸ்தா என்று அழைக்கிறோம். அரக்கி மகிஷியை வதம் வதம் செய்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டியதால் சபரிமலை ஐயப்பன் தர்மசாஸ்தா என பக்தர்களால் கொண்டாடப்படுகிறார்.