குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன்? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!Benefits of kulatheivam in dreams

நாம் கும்பிடும் இஷ்ட தெய்வங்களை விட குலதெய்வத்திற்கு தான் அதிக பலம் என்று நமது முன்னோர்கள் கூறுகின்றனர்.  நமது குடும்பத்தை காக்கும் குலதெய்வ வழிபாட்டை மறப்பது நமது தாயை பட்டினி போடுவதற்கு சமமாக கூறப்படுகிறது.

Kulatheivam

எனவே குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன்கள் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக குல தெய்வத்தை கனவில் கண்டால் நம்முடைய வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை குறிக்கும்.

குல தெய்வத்தை கனவில் கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். மேலும் குலதெய்வ கோயிலை கனவில் கண்டால் மனதில் நினைக்கின்ற நல்ல காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

Kulatheivam

குலதெய்வத்தை வழிபடாதவர்களின் கனவில் குலதெய்வம் வந்தால் குலதெய்வத்தை வழிபட வேண்டும் என்று அர்த்தம்.

குலதெய்வத்தை கும்பிடுவது போன்று கனவில் வந்தால் வெளி வட்டாரத்தில் புகழ் மற்றும் மதிப்பு உயரும் என்று அர்த்தம்.