
suresh raina talk about best captain
இந்திய அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, இந்திய கொண்ட கேப்டன்களில் தோனி தான் சிறந்தவர் என்று கூறியுள்ளார்.
கடந்த 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்திய அணிக்கு தோல்வியடைந்ததில் இருந்து, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அணித்தலைவர் தோனி எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை.
இந்தநிலையில் 2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். அதே அணியில் சுரேஷ் ரெய்னாவும் இடம் பெற்றுள்ளார். இந்தநிலையில் பிரபல ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பான "தி சூப்பர் கிங்ஸ்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுரேஷ் ரெய்னா பேசினார்.
அந்த நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா பேசுகையில், "இந்திய அணியை சிறப்பாக மாற்றிய சிறந்த கேப்டன் எங்களிடம் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இப்போது எங்கள் டிரஸ்ஸிங் ரூமில் அதே போன்ற வெளிச்சம் உள்ளது. இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்" என்று கூறினார்.
Advertisement
Advertisement