யுவன் சங்கர் ராஜாவினால் தான் என் குடும்பம் இந்த நிலைமைக்கு வந்தது... தனுஷின் உருக்கமான பேச்சு.!!
சின்ன பையன் ஆனால் பலசாலி.! சென்னை வீரரை புகழ்ந்து தள்ளிய ஸ்டீபன் பிளமிங்.!
சின்ன பையன் ஆனால் பலசாலி.! சென்னை வீரரை புகழ்ந்து தள்ளிய ஸ்டீபன் பிளமிங்.!

ஐபிஎல் தொடரின் 49 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அந்த போட்டியில், அதிகபட்சமாக ருத்ராஜ் கெய்க்வாட் 53 பந்துகளில் 72 ரன்கள் அடித்தார். இவர் அடித்த இந்த ரன்களே சென்னை அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. கடைசியாக ஆடிய இரண்டு போட்டிகளிலும் ருத்ராஜ் கெய்க்வாட் அரைசதத்தை விளாசியுள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக கெய்க்வாட் பயன்படுத்திக் கொண்டுள்ளார். ஆவர் சின்ன பையன்தான் ஆனால் பலசாலி, நீண்ட நாட்களுக்கு பின்னர் கெய்க்வாடிக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததற்கும் அவர் தன்னை சிறப்பான வீரராக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதற்கும் பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.