என்னதான் கோவம் வந்தாலும் இப்படியா செய்வது?? போட்டிக்கு நடுவே வங்கதேச வீரர் செய்த காரியம்.. வைரல் வீடியோ..

என்னதான் கோவம் வந்தாலும் இப்படியா செய்வது?? போட்டிக்கு நடுவே வங்கதேச வீரர் செய்த காரியம்.. வைரல் வீடியோ..


shocking-scenes-shakib-al-hasan-kicks-and-throws-stumps

கிரிக்கெட் போட்டியின் போது வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் ஸ்டெம்பை உதைத்ததால் அவருக்கு 4 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடப்படும் ஐபில் கிரிக்கெட் போட்டிபோன்று டிபிஎல் எனப்படும் டாக்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடந்துவருகிறது. இதில் நேற்றைய போட்டியில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் அபஹானி அணிக்கு எதிராக  பந்து வீசினார். அவர் வீசிய பந்து பேட்ஸ்மேன் முஷ்பிஹூர் ரஹீம் காலில் பட்டது.

இதனால் ஷகிப் அல் ஹசன் நடுவரிடம் எல் பி டபிள்யூ முறையில் அவுட் செய்ததாகக் கூறி விக்கெட் கொடுக்குமாறு முறையிட்டார். ஆனால் நடுவர் மறுக்கவே, கோபமடைந்த ஷகிப் காலால் அங்கிருந்த ஸ்டெம்புகளை தனது காலால் எட்டி உதைத்ததோடு, நடுவரிடம் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தார்.

அதேநேரம் தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தை நிறுத்தும்படி நடுவர்கள் கூறினர்.  அப்போதும் நடுவரிடம் வந்து வாக்குவாதம் செய்த அவர், அங்கிருந்த ஸ்டம்புகளை பிடுங்கி வீசினார். ஷகிப்பின் இந்த செயலைக் கண்ட நடுவர்கள் கடும் அதிருப்தி அடைந்ததோடு இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரிட்டயத்திடம் முறையிட்டனர். இந்நிலையில் ஷகிப்புக்கு 5 லட்சம் ரூபாய் அபராதமும், 4 போட்டிகளில் விளையாட தடை விதித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.