ரோஹித் சர்மாவின் புதிய சாதனை!. துள்ளி குதிக்கும் மும்பை ரசிகர்கள்!
ரோஹித் சர்மாவின் புதிய சாதனை!. துள்ளி குதிக்கும் மும்பை ரசிகர்கள்!

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 34 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியனா சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், முன்பை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
டெல்லி, மும்பை அணிகள் இடையே நடந்த நேற்றைய முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி தோல்வி அடைந்ததை அடுத்து மும்பை அணி இரண்டாவது இடத்திலும், இரண்டாவது இடத்தில் இருந்த டெல்லி அணி மூண்டர்வது இடத்திற்கும் சென்றுள்ளது.மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ஓட்டங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா 30 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் 8 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்து 20 ஓவர் போட்டிகளில், 8 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். ரெய்னா, கோஹ்லி இதற்கு முன்பு இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.
சர்வதேச டி20யில் ரோஹித் ஷர்மா சர்வதேச அளவில் 8வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். சர்வதேச டி20யில் 2,331 ரன்களும், ஐ.பி.எல்-ல் 4,716 ரன்களும் எடுத்து ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.