முதல் ஆட்டத்திலேயே அதிரடி சதம் அடித்த பிருத்வி ஷா..! குவிந்து வரும் பாராட்டுக்கள்..!

முதல் ஆட்டத்திலேயே அதிரடி சதம் அடித்த பிருத்வி ஷா..! குவிந்து வரும் பாராட்டுக்கள்..!



prithiv shah beat first 100 in test

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய பிருத்வி ஷா அதிரடியாக ஆடி தனது முதல் சத்தினை கடந்துள்ளார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இந்தப் போட்டியில் அறிமுக வீரர் ப்ரித்வி ஷா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். மேலும், வேகப் பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ind vs WI first test

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அந்த அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் இன்றையப் போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக கிரேக் பிராத்வைட் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் நடக்கின்றன. முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் அறிமுக வீரராக மும்பையை சேர்ந்த பிருத்வி ஷா களமிறங்குகினார். 18 வயதான இவர், 293 வது டெஸ்ட் வீரராக களமிறங்குகினார். அவர் கே.எல்.ராகுலுடன் தொடக்க வீரராக களமிறங்குகினார்.

ind vs WI first test

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுலுடன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த புஜாரா பிருத்வி ஷா உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகவும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆரம்பம் முதலாலே அதிரடியாக ஆடிய பிருத்வி ஷா சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது முதல் சத்தினை தனது முதல் போட்டியிலே விளாசினார். அவர் 99 பந்துகளில் 15 பவுண்டரிகளை அடித்து இந்த சத்தினை கடந்தார். 

ind vs WI first test

இந்திய அணியின் சார்பில் குறைந்த வயதில் டெஸ்ட் போட்டியில் சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பிருத்வி ஷா பெற்றுள்ளார். 17 வயதில் சதமடித்த சச்சின் முதல் இடத்தில் உள்ளார்.

தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 37 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்துள்ளது. பிருத்வி ஷா 103 ரன்களுடனும் புஜாரா 80 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

முதல் போட்டியிலேயே சதமடித்த பிருத்வி ஷாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.