ஒருவேளை இது நடந்திருந்தால் சென்னை அணி நேற்று வெற்றி பெற்றிருக்கலாம்! என்ன தெரியுமா?
ஐபில் போட்டியின் 12 வது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 3 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் நேற்றைய சென்னை மும்பை ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
சென்னையின் சொந்த மண்ணில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ராய்டு 42 ரன் எடுத்தார்.
132 என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் சார்பாக மும்பை அணி வீரர் சூரியகுமார் யாதவ் 71 ரன் எடுத்தார்.
சூர்யகுமாரின் இந்த ஆட்டம்தான் மும்பை அணி வெற்றிபெற மிக முக்கியமான காரணம். சூர்யகுமார் 4 ரன் எடுத்திருந்த நிலையில் அவர் தூக்கி அடித்த பந்தை முரளி விஜய் கேட்ச் செய்ய தவறிவிட்டார். ஒருவேளை முரளி விஜய் அந்த கேட்சை பிடித்திருந்தால் மும்பை அணியின் ஆட்டம் தலைகீழாக மாறியிருக்கும்.