நேற்றைய ஆட்டத்தில் தோணி செஞ்ச இந்த காரியத்தை பாத்திங்களா? வீடியோ!

நேற்றைய ஆட்டத்தில் தோணி செஞ்ச இந்த காரியத்தை பாத்திங்களா? வீடியோ!


MS Dhoni lightning performance video

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை அணி இந்த சீசனிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை நடந்த 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்தது சென்னை. நேற்றைய போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி சென்னை வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அதிரடி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

IPL 2019

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் மிக வேகமான ஸ்டெம்பிங் ஒன்றை தல தோணி செய்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. வழக்கமாக மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து எதிரணி வீரர்களை தெறிக்கவிடும் தோனி, இந்த போட்டியிலும் ஒரு மின்னல்வேக ஸ்டம்பிங்கை செய்தார். இளம் வீரர் ஷுப்மன் கில் இந்த முறை தோனியின் ஸ்டம்பிற்கு பழியானார். 

IPL 2019

இம்ரான் தாஹிர் வீசிய 11வது ஓவரின் முதல் பந்தை அடிக்க முயலும்போது பேலன்ஸ் மிஸ் ஆகி கிரீஸை விட்டு வெளியேற, அதிவேகமாக செயல்பட்ட தோனி, கில்லை ஸ்டம்பிங் செய்தார். அந்த வீடியோ இதோ..