உலகம் விளையாட்டு

பீல்டிங் செய்யும்போது அவிழ்ந்து விழுந்த ஆடை! அடுத்த கணமே பீல்டர் என்ன செய்தார் தெரியுமா? வீடியோ.

Summary:

Marnus Labuschagne with some elite fielding

இந்தியாவில் நடைபெறும் விஜய் ஹசாரே என்னும் உள் நாட்டு கிரிக்கெட் தொடர் போல ஆஸ்திரேலியாவிலும் உள்நாட்டு தொடர் நடந்துவருகிறது. அதில் விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து அணிகள் மோதின. போட்டியின் முதலில் விக்ட்டோரியா அணி பேட் செய்தது.

போட்டியின் 29 வது ஓவரில் விக்ட்டோரியா அணி வீரர் பந்தை ஆப் திசையில் அடித்துவிட்டு வேகமாக ஒரு ரன் எடுக்க முயற்சித்தார். அப்போது எதிரணி வீரர் மார்னஸ் வேகமாக பாய்ந்து சென்று பந்தை தடுத்து ரன் அவுட் செய்தார்.

இதில் காமெடி என்னவென்றால் மார்னஸ் பந்தை தடுக்க முயற்சிக்கும்போது அவரது பேன்ட் இடுப்பில் இருந்து பாதி வரை கழண்டுவிட்டது. தனது பேன்ட் அவிழ்ந்து விழுவதையும் பொருட்படுத்தாமல் மார்னஸ் பந்தை வேகமாக கீப்பரிடம் த்ரோவ் செய்து எதிர் அணி வீரரை ரன் அவுட் செய்தார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. 


Advertisement