
krunal pandya worst record in T20
இந்தியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா– ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பிரிஸ்பேன் நகரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி பௌலிங்கை தேர்வு செய்தது.
முதல் 7 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 42 ரன்களே எடுத்தது. அதன் பிறகே அதிரடி ரன்வேட்டையில் குதித்தனர். கிறிஸ் லின், கலீல் அகமதுவின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை பறக்க விட்டார். கேப்டன் ஆரோன் பிஞ்ச் தனது பங்குக்கு 27 ரன்களும் (24 பந்து, 3 பவுண்டரி), கிறிஸ் லின் 37 ரன்களும் (20 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து குல்தீப் யாதவின் சுழலில் சிக்கினர்.
அதைத் தொடர்ந்து மேக்ஸ்வெல்லும், ஆல்–ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிசும் இணைந்து அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்தினர். குல்தீப் யாதவ் சுழலில் அவர்கள் தடுமாறினாலும் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் குருணல் பாண்ட்யாவின் பந்து வீச்சை நொறுக்கித்தள்ளினர். பாண்ட்யாவின் ஒரு ஓவரில் மேக்ஸ்வெல் ‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசி உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
இந்த ஆட்டத்தில் குருணால் பாண்டியா 4 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த 3-வது இந்திய பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார் குருணால் பாண்டியா.
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்த வருடம் செஞ்சூரியனில் சாஹல் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஜோகிந்தர் சர்மா 2007ல் டர்பனில் இங்கிலாந்திற்கு எதிராக 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 2-வது இடத்தில் உள்ளார். குருணால் பாண்டியா 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 3-வது இடத்தில் உள்ளார்.
6⃣6⃣6⃣
— Sabir Ali PTI (@ImSabirAliKhan) November 21, 2018
Glenn Maxwell punishes #KrunalPandya#AUSvIND @Gmaxi_32 #AUSvsIND pic.twitter.com/7tdiRbT84n
Advertisement
Advertisement