ராஜஸ்தான் அணி தோல்வியால் சென்னை அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு! என்ன விஷயம் தெரியுமா?
ஐபில் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவிய பெங்களூர் அணி அடுத்த கட்டத்திற்கு செல்வது மிகவும் கடினம். மற்றைய அணிகள் அடுத்த கட்டத்திற்கு செல்லும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.
இதுவரை நடந்த போட்டிகளில் கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் முதல் நான்கு இடத்தில் உள்ளது. நேற்றைய இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியுடன் மோதியது. இதில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ராஜஸ்தான் அணியின் இந்த தோல்வி சென்னை அணிக்கு சற்று பின்னடைவை ஏற்பட்டுத்தியுள்ளது.
அதாவது நேற்று வரை புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த சென்னை அணி நேற்று கொல்கத்தா அணி வெற்றிபெற்றதால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. நேற்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றதன் மூலம் கொல்கத்தா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றிற்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.