ஐ.பி.எல் வரலாற்றில் முதல்முறையாக ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறுகிறது அதிக ரசிகர்களை கொண்ட சிஎஸ்கே.!first-time-csk-missed-play-off-round-in-ipl

இந்திய அளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள அணி என்றால் அது சிஎஸ்கே தான். ஆனால் இந்தமுறை சிஎஸ்கே அணி, ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளனர். ஐபிஎல் என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் நெஞ்சை நிமிர்த்து சிங்கம்போல் ஆடுகளத்தில் கர்ஜித்து அனைத்து வீரர்களும் பந்துகளை பறக்க விடுவார்கள். 

அந்தவகையில் இந்த வருடமும் ஐபிஎல் போட்டியின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. அந்தப் போட்டியிலும் வழக்கம்போல கடைசி ஓவரில் சிறப்பாக அடித்து சென்னை அணி வெற்றி பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்தியது.

csk

ஆனால் அதன் பிறகு சென்னை அணிக்கு தொடர்ந்து தோல்வி முகம் தான். சென்னை அணி இதுவரை ஆடிய 11 போட்டிகளில் 3 போட்டிகளில் மற்றும் வெற்றிபெற்று மற்ற 8 போட்டிகளில் படுதோல்வி அடைந்து ஐ.பி.எல் வரலாற்றில் முதல்முறையாக ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது வெளியேறுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த சீசனில் முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறுகிறது சென்னை அணி.