விளையாட்டு

வேகமெடுக்கும் கொரோனா.! ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் தனிமை.! நாளை சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறுமா.?

Summary:

ஐபில் 14 வது சீசன் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இதுவரை 29 போட்டிகள் ந

ஐபில் 14 வது சீசன் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இதுவரை 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ளநிலையில் நேற்று நடக்கவிருந்த கொல்கத்தா - பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த ஆட்டம் கொல்கத்தா வீரர்கள் இருவருக்கு கொரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், திடீரென தள்ளிவைக்கப்பட்டது. கடுமையான பயோ பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது ஐபிஎல் நிர்வாகத்தை கவலை அடையச்செய்துள்ளது.   

இந்த நிலையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர்  பாலாஜிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் கடுமையான தனிமைப்படுத்தும் முகாமுக்குச் சென்றுள்ளனர். இதனால் நாளை நடக்கும் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம்  ஒத்திவைக்கப்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. 

எனினும் மேற்கூறிய இரு ஆட்டங்களும் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து இதுவரை அறிவிக்கவில்லை. டெல்லியில் இன்று மும்பை இந்தியன்ஸ், சன்ரைரஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வழக்கம் போல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரவல் காரணமாக எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்துவது பற்றி பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement