2ndT20: சிறப்பாக பந்துவீசிய இந்திய அணிக்கு தொடரை சமன் செய்யும் வாய்ப்பு பறிபோனது! ஆட்டம் மழையால் ரத்து

2ndT20: சிறப்பாக பந்துவீசிய இந்திய அணிக்கு தொடரை சமன் செய்யும் வாய்ப்பு பறிபோனது! ஆட்டம் மழையால் ரத்து



2nd T20 called off due to rain

மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதிய இரண்டாவது டி20 போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை வெல்லும் வாய்ப்பை இந்திய நழுவவிட்டது.

முதலாவது போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையில், இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. இந்நிலையில் இன்றைய போட்டியிலும் மழை குறுக்கிட்டதால் மீண்டும் டக்வொர்த் லீவிஸ் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

2nd T20 called off due to rain

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது இந்திய அணி. புவனேஷ்குமார் வீசிய ஆட்டத்தின் முதலாவது ஓவரிலேயே இரண்டாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமலே ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ஆட்டமிழந்தார்.

2nd T20 called off due to rain

அவரைத்தொடர்ந்து லின் 13, ஷார்ட் 14, ஸ்டைனிஸ் 4, மக்ஸ்வல் 19 ரன்கள் எடுத்து அடுத்தது ஆட்டமிழந்தனர். 11 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் வந்த பென் மக்டொர்மெட் மட்டும் நிதானமாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்தார். அலெக்ஸ் ஹாரி 4, நாதன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆண்ட்ரீவ் டை கடைசி வரை ஆட்டமிழக்காமல் 12 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் 19 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. அதனை தொடர்ந்து மழை நிற்காமல் பெய்ததால் இந்திய இந்திய அணிக்கு முதலில் 19 ஓவர்களுக்கு 137 எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

2nd T20 called off due to rain

இந்திய அணி சார்பில் புவனேஷ்குமார் மற்றும் கலீல் அஹ்மத் தல இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மேலும் மழை பெய்ததால் ஆட்டம் 11 ஓவர்களாக குறைக்கப்பட்டு, இந்திய அணிக்கு 90 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்னும் காலதாமதமானதால் 5 ஓவர்களுக்கு 46 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் மீண்டும் மழை விடாது பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

2nd T20 called off due to rain

மிகவும் எளிதான இலக்கை இந்திய அணி அடித்து இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.