செல்போன் அழைப்பின் போது ஹலோ என்று சொல்வதற்கு பதிலாக வந்தே மாதரம்... மகாராஷ்டிரா அமைச்சர்..!

செல்போன் அழைப்பின் போது ஹலோ என்று சொல்வதற்கு பதிலாக வந்தே மாதரம்... மகாராஷ்டிரா அமைச்சர்..!


Vande Mataram instead of saying hello during cell phone calls...Maharashtra Minister.

செல்போன் அழைப்புகளை எடுத்ததும் ஹலோ என்று சொல்வதற்கு பதில் வந்தே மாதரம் என கூற வேண்டும் என்று மராட்டிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மும்பை, மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சராக பதவியேற்று 7 வார காலமாகிய நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிரா மாநில அரசின் மந்திரிசபை விரிவாக்கம் நடந்தது. அதில் 18 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந் நிலையில்,  இன்று மராட்டிய முதலமைச்சர் அலுவலகம் யார் யாருக்கு எந்தெந்த துறை என்ற அறிக்கையை வெளியிட்டது. இதில் வனத்துறை மற்றும் கலாச்சார துறை அமைச்சராக பாஜகவின் சுதிர் முங்கந்திவார் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இனி அரசாங்க அதிகாரிகள் செல்போன் அழைப்புகளை எடுத்ததும் ஹலோ என்று சொல்வதற்கு பதில் வந்தே மாதரம் என கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான அதிகாரபூர்வ உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார். இது குறித்து சுதிர் முங்கந்திவார் கூறும் போது, ஹலோ என்பது ஒரு ஆங்கில வார்த்தை, அதை விட்டுவிடுவது நல்லது. 

மேலும் வந்தே மாதரம் என்பது வெறும் வார்த்தையல்ல, ஒவ்வொரு இந்தியனுக்கும் உள்ள உணர்வு. நாம் சுதந்திரத்தின் 76-வது ஆண்டில் நுழைகிறோம். நாம் சுதந்திரத்தை கொண்டாடுவோம். எனவே அதிகாரிகள் ஹலோ என்று சொல்வதற்கு பதிலாக தொலைபேசியில் வந்தே மாதரம் என்று சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். என தெரிவித்தார்.