தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
#Tamilnadu Politics: செம்மரத்தை பதுக்கிவைத்த வழக்கில் சசிகலாவின் உறவினர் கைது..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் உறவினர் பாஸ்கர். இவர் நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் ரூ.48 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் அதிகாரிகளால் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், களத்தில் இறங்கிய மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் பாஸ்கரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பாஸ்கர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அத்துடன் பாஸ்கரிடம் விடிய விடிய நடந்த வருவாய் புலனாய்வு விசாரணையை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.