பழைய பதிவால் புதிதாக வெடித்த வெடிகுண்டு! விஜய் சேதுபதியின் மறைமுக பேச்சால் கடும் எதிர்ப்பு..!!!
அமைச்சர் சரத்குமாருக்கு கல்தா... பழைய வீடியோவால் வந்த வினை! முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு! இடைத்தேர்தல் அரசியலில் திடீர் ட்விஸ்ட்..!!!
தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் , தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக தவெக தலைமை தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு அமைச்சரான சரத்குமாருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மதுராந்தகத்துக்கு ஆதவ் அர்ஜுனா பொறுப்பு
மதுராந்தகம் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழுவின் பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் அமைச்சர்கள் ராஜ்குமார், தென்னரசு, வினோத் உள்ளிட்டோர் இணைப் பொறுப்பாளர்களாகவும், சில எம்.எல்.ஏக்கள் துணைப் பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தாராபுரம் தொகுதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சரவையில் அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர்...! தவெக - வில் அடுத்த விக்கெட் அவுட்? பரபரக்கும் அரசியல் களம்..!!!
மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் வரும் நிலையில், அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள சரத்குமார் பட்டியலில் இடம்பெறவில்லை. இதே நேரத்தில் தாராபுரம் தொகுதிக்கான பணிக்குழுவில் அங்குள்ள மாவட்ட பொறுப்பு அமைச்சருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சரத்குமாருக்கு பொறுப்பு வழங்கப்படாதது குறித்து கட்சிக்குள் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வைரல் வீடியோ சர்ச்சையும் பின்னணியும்
சரத்குமார் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் போட்டியின்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் பொடிபோன்ற பொருளை ஏடிஎம் அட்டை மற்றும் ரூ.500 நோட்டின் உதவியுடன் கையாளும் காட்சி இடம்பெற்றிருந்ததாக செய்திகள் வெளியாகின. இதை சிலர் போதைப்பொருளுடன் தொடர்புபடுத்தி விமர்சித்தனர்.
இதற்கு சரத்குமார் விளக்கம் அளித்தபோது, அந்தப் பொருள் போதைப்பொருள் அல்ல என்றும், உடல்நலக்குறைவால் இருந்த தனது குழந்தைக்கு வழங்குவதற்காக மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையை பொடியாக்கியதாகவும் தெரிவித்தார். குடும்பத்துடன் ஐபிஎல் போட்டியை பார்க்கச் சென்றபோது நடந்த சம்பவம் அது என்றும் அவர் கூறினார்.
அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சு
இந்தப் பின்னணியில் சரத்குமார் இடைத்தேர்தல் பணிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருப்பது குறித்து கட்சி வட்டாரத்தில் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. குறிப்பாக, வரவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் அவருடைய பதவியில் மாற்றம் ஏற்படலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. ஆனால், இதுகுறித்து தவெக தலைமை தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனவே, அமைச்சரவை மாற்றம் தொடர்பான தகவல்கள் தற்போது உறுதி செய்யப்படாத அரசியல் தகவல்களாகவே உள்ளன.
அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் தவெகவுக்கு முக்கியமான அரசியல் சோதனையாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தேர்தல் பணிக்குழு நியமனங்களில் தவெக தேர்தல் பொறுப்பு தொடர்பாக வெளியாகியுள்ள மாற்றங்கள் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
அமைச்சர் சரத்குமாருக்கு கல்தா.. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு.. தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு அக்டோபர் 9 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.. இந்த இடைத்தேர்தலையொட்டி தவெகவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பாளர்களாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேவேளையில் மதுராந்தகம் சட்டசபை தொகுதியின் பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், இணை பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் ராஜ்குமார், தென்னரசு, வினோத் ஆகியோரும், துணை பொறுப்பாளர்களாக சோழிங்கநல்லூர் எம்எல்ஏ சரவணமூர்த்தி, செங்கல்பட்டு எம்எல்ஏ தியாகராஜன், திருப்போரூர் எம்எல்ஏ விஜயராஜ், பல்லாவரம் எம்எல்ஏ காமாட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் எம்எஸ் பாலாஜி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அமைச்சர் சரத்குமாருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. சரத்குமார் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். அதுமட்டுமின்றி செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் உள்ளார். இடைத்தேர்தல் நடக்கும் மதுராந்தகம் சட்டசபை தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்திற்குள்ளேயே வரும் நிலையில் சரத்குமார் தவெகவில் ஓரம்கட்டப்பட்டுள்ளார்.. இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. தவெக அமைச்சராக சரத்குமார் பொறுப்பேற்ற பிறகு அவர் தொடர்பான பழைய வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பார்ப்பதும், அவர் ரூபாய் நோட்டில் ஏதோ ஒன்றை ஏடிஎம் கார்டு வைத்து தூளாக்குவதும் பதிவாகி இருந்தது. அது போதைப்பொருள் என்று எதிர்க்கட்சியினர் கூறினர். ஆனால் சரத்குமார் அதனை மறுத்தார். தனது குழந்தையின் மருத்துவ மாத்திரையை தான் தூளாக்கியதாக அவர் விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்தில் இருந்தே அமைச்சர் சரத்குமார் மீது தவெக தலைமை அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போதையசெயல் அதனை உறுதியாக்கி உள்ளது. அதுமட்டுமின்றி அடுத்ததாக அமைச்சரவை மாற்றம் நடக்கும்போது சரத்குமாரிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட கூட வாய்ப்புள்ளதாக தகவல்கள்வருகின்றன.
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) September 15, 2026
இதையும் படிங்க: சற்று முன்.... பாஜகவிலிருந்து விலகி தவெகவில் ஐக்கியம்..! பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத்குமார்! வெளியிட்ட பரபரப்பு பதிவு...!!!