பழைய பதிவால் புதிதாக வெடித்த வெடிகுண்டு! விஜய் சேதுபதியின் மறைமுக பேச்சால் கடும் எதிர்ப்பு..!!!
தவெக கட்சி பதவிக்காக.... ரூ.15 லட்சம் பேரம்....! ரகசியமாக பதவிசெய்யப்பட்ட ஆடியோவை லீக் செய்த ஸ்ரீதரன்! அதிர்ச்சியில் முதல்வர் விஜய்...!!!!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நகர பொருளாளர் பதவியை பெற்றுத்தர பணம் பேசப்பட்டதாக கூறப்படும் விவகாரம் கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடந்ததாகக் கூறப்படும் ரகசியப் பேச்சுவார்த்தையின் ஆடியோவும் வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியில் புதிதாக இணைந்த பெத்தராஜ் என்பவர், தனது உறவினர் ஒருவருக்கு சாயல்குடி நகர பொருளாளர் பதவி வழங்க வேண்டும் என நிர்வாகிகளிடம் கேட்டதாக கூறப்படுகிறது. பதவி வழங்குவதற்கு பரிந்துரை செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மற்றொரு உறவினரான ஸ்ரீதரனை அணுகியதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: BREAKING: திமுக கொறடா எ.வ.வேலுவால் அதிருப்தியில் அறிவாலயம்...! கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்...!!!
பதவிக்காக ரூ.15 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பேச்சு
சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன், தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் ஆகியோரை பெத்தராஜ் அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கட்சியில் அண்மையில்தான் இணைந்திருப்பதால் பதவிக்கான பரிந்துரையை இருவரும் ஏற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து கடலாடி தவெக மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ள தனது உறவினர் ஸ்ரீதரனை பெத்தராஜ் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நகர பொருளாளர் பதவியை பெற்றுத் தர முடியும் என்றும், அதற்கு ரூ.15 லட்சம் வரை செலவாகும் என்றும் ஸ்ரீதரன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் அந்த தொகை ரூ.5 லட்சமாக குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரகசியமாக பதிவு செய்யப்பட்ட ஆடியோ
பேச்சுவார்த்தையின்போது, பதவி வழங்க மறுத்த நிர்வாகிகளை பெத்தராஜ் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனை ஸ்ரீதரன் தனது செல்போனில் ரகசியமாக பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் அந்த ஆடியோ பதிவு சாயல்குடி ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் மற்றும் நகர செயலாளர் அந்தோணி மாதவடியான் ஆகியோரிடம் ஸ்ரீதரனால் காண்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கட்சி நிர்வாகிகள் மத்தியில் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகார் எழுந்த நிலையில் விசாரணை கோரிக்கை
கட்சிப் பொறுப்புக்காக பணம் பேசப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனிடையே, பதவி வழங்குவது தொடர்பாக பேசப்பட்ட தொகை மற்றும் ஆடியோவில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரின் விளக்கம் வெளியாகவில்லை.
சாயல்குடி பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த சர்ச்சை தொடர்பாக கட்சி தலைமை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது அடுத்தகட்டத்தில் தெரியவரும்.
இதையும் படிங்க: 177 தனியார் பள்ளிகள்.. பல கோடி வசூல்? சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்.. CCB போலீசார் அதிரடி நடவடிக்கை!