“அசுரன்” கதையின் முதல் சாய்ஸ் கருணாஸா? – வெற்றிமாறன் சொன்ன அந்தக் கதை!
அதிர்ச்சி! அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி....! கதறும் குடும்பத்தினர்கள்....!!!
காட்டாங்குளத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் 26 வயது இளைஞர் உயிரிழந்தார். விருதுநகரிலிருந்து சென்னை நோக்கி குடும்பத்துடன் வந்தபோது, அவரை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இறையன்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மூன்று நாள் சட்டப்பேரவை விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து, அமைச்சர் ஜெகதீஸ்வரி அரசு காரில் முன்னதாக சென்றதாக கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து குடும்பத்தினர் வந்த காரில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலின் வேகத்தில் தூக்கி வீசப்பட்ட இறையன்பு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்.... என்னையும் தான் CM ஆக்க ஆசைப்படுறாங்க....! உண்மையை புட்டு புட்டு வைத்த திருமாவளவன்...!!!
அமைச்சர் பெயரில் பதிவு செய்யப்பட்ட கார்
விபத்துக்கு காரணமான கார் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த வாகனம் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் விபத்து தொடர்பான விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் விபத்து கார் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து அதிகாரிகள் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குஷியோ குஷி.... பெண்களுக்கு CM விஜய் கொடுத்த அந்த 3 மெகா சர்ப்ரைஸ்! கொண்டாட்டத்தில் தமிழகம்...!!!