சூர்யாவுடன் நடிப்பது குறித்து நெகிழ்ந்த இளம் நடிகை.. கண்களை எடுப்பது மிகவும் கடினம்!
திடீர் ட்விஸ்ட்.... என்னையும் தான் CM ஆக்க ஆசைப்படுறாங்க....! உண்மையை புட்டு புட்டு வைத்த திருமாவளவன்...!!!
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யை “வருங்கால பிரதமர்” என அக்கட்சியினர் கூறி வரும் நிலையில், இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தொண்டர்கள் தங்கள் தலைவருக்கு உயர்ந்த பதவிகளை விரும்புவது இயல்பானது என்றும், அதில் தவறு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தொண்டர்கள் தங்கள் தலைவரை உயர்ந்த பதவியில் பார்க்க விரும்புவது, கூட்டணி கட்சிகளுக்கு எதிரான நிலைப்பாடாக கருத முடியாது என்றும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: CM விஜய்யின் அடுத்த அதிரடி அரசியல் நகர்வு ! கூட்டணிக்கு செக் வைக்க திட்டம்.... அதிரும் அரசியல் களம்!!!
விஜய்யை பிரதமர் என கூறுவது அவர்களின் ஆசை
இதுகுறித்து பேசிய திருமாவளவன், ஒவ்வொரு கட்சித் தொண்டருக்கும் தங்கள் தலைவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசையும் லட்சியமும் இருப்பது இயல்புதான் என்றார். தனது கட்சியினர்கூட தன்னை முதலமைச்சராக்க வேண்டும் என விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், தவெக தொண்டர்கள் விஜய்யை பிரதமராக பார்க்க வேண்டும் என கூறுவது அவர்களுடைய ஆசையின் வெளிப்பாடுதான். அதற்காக அதை தவறு என்று கூற வேண்டிய அவசியமில்லை என அவர் நிதானமாக தெரிவித்தார்.
கூட்டணியில் இருந்தாலும் சொந்தக் கட்சி விருப்பம் வேறு
ஒரு கூட்டணியில் அங்கமாக இருக்கும்போது, சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்கள் தலைவருக்கு உயர்ந்த பதவி கிடைக்க வேண்டும் என பேசுவது இயல்பானது என்றும் திருமாவளவன் சுட்டிக்காட்டினார். அந்தக் கருத்து உடனடியாக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு எதிரான நிலைப்பாடாக மாறிவிடாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அரசியல் களத்தில் பல்வேறு கட்சிகளின் தொண்டர்கள் தங்கள் தலைவர்களின் எதிர்காலம் குறித்து இவ்வாறான விருப்பங்களை வெளிப்படுத்துவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில், விஜய்யை பிரதமர் என தவெகவினர் கூறுவதையும் ஒரு அரசியல் விருப்பமாகவே பார்க்க வேண்டும் என்பதே திருமாவளவனின் கருத்தாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: எங்ககிட்டையே உங்க வேலையை காட்டுறீங்களா? தவெகவை மிரட்டிய காங்கிரஸுக்கு முதல்வர் விஜய் வைத்த செக்..!!!