ஐயோ... இப்படியா ஆகணும்! 6 மாதங்கள் ஜப்பானில் நர்சிங் வேலை பார்த்த 22 வயது இந்திய பெண்மணிக்கு நடந்த அதிர்ச்சி! துடிதுடிக்கும் குடும்பத்தினர்...!!!



kerala-woman-dies-in-japan-bullet-train-track

கேரளாவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் தேவிகா, ஜப்பானில் புல்லட் ரயில் மோதி உயிரிழந்தார். கண்ணூர் மாவட்டம் இரிட்டி பகுதியைச் சேர்ந்த அவர், கடந்த 6 மாதங்களாக ஜப்பானில் நர்சிங் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கமிகஹாரா பகுதியில் நடந்த இந்த துயரச் சம்பவம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

6 மாதங்களுக்கு முன்புதான் ஜப்பான் சென்ற தேவிகா

தேவிகா ஆய்வகத் தொழில்நுட்பப் படிப்பை முடித்திருந்தார். 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்காக சுமார் 6 மாதங்களுக்கு முன்பு ஜப்பான் சென்ற அவர், அங்கு நர்சிங் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

இதையும் படிங்க: ஐயோ... வெள்ளத்தில் அடித்து சென்று 24 மணி நேரம் சேற்றில் போராட்டம்! அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்ட 25 இளம்பெண்.... மறுபுறம் காத்திருந்த அதிர்ச்சி! பகீர் காட்சி...!!!

இந்த நிலையில், ஜப்பானின் கமிகஹாரா பகுதியில் உள்ள புல்லட் ரயில் பாதையில் தேவிகா ரயில் மோதி உயிரிழந்தார். ரயில் அதிவேகமாக சென்றதால் உடல் மோசமாகச் சிதைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அடையாள அட்டை மூலம் உறுதி செய்த அதிகாரிகள்

தேவிகாவின் அடையாள அட்டையை அதிகாரிகள் கைப்பற்றியதையடுத்து, உயிரிழந்தது அவர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகள் காணாமல் போனதால் பதற்றமடைந்த பெற்றோர், கேரள முதல்வர் வி.டி.சதீசன் மற்றும் எம்.பி.க்களிடம் உதவி கோரியிருந்தனர். இந்த நிலையில் தேவிகா உயிரிழந்த தகவல் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

உடலை தாயகம் கொண்டுவர 3 வாரங்கள் ஆகும்

புல்லட் ரயில் மோதியதில் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது. உடலை ஜப்பானில் இருந்து கேரளாவுக்கு கொண்டு வர குறைந்தது 3 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நீண்ட நடைமுறைகளை கருத்தில் கொண்டு தேவிகாவின் உடலை ஜப்பானிலேயே விட்டுவிட குடும்பத்தினர் வேதனையுடன் முடிவு செய்துள்ளனர். 22 வயதிலேயே வெளிநாட்டில் உயிரிழந்த தேவிகாவின் மரணம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள இளம்பெண் உயிரிழந்த தகவல் அப்பகுதியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.