கேடுகெட்ட ஆட்சி.. இந்த புகைப்படம் தான் சாட்சி! கனிமொழியின் காட்டமான எக்ஸ் பதிவு! தமிழக அரசியலில் பரபரப்பு..!!!



madurai-tamilselvan-death-protest-police-action

மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், முட்புதர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறு ஆய்வில் மாணவன் தாக்கப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொலை வழக்காக மாற்றக் கோரி போராட்டம்

தமிழ்ச்செல்வன் மரணம் தொடர்பாக ஆரம்பத்திலேயே சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மாணவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் உடற்கூறு ஆய்வில் இருப்பதாக தகவல் வெளியானதால், விசாரணை குறித்து உறவினர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பினர்.

இதையும் படிங்க: 2 தொகுதிகள்… 3 முக்கிய தலைவர்கள்! இடைத்தேர்தலுக்கு திமுகவின் அதிரடி பிரச்சார வியூகம்!

இதனைத் தொடர்ந்து, வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், தற்போதைய விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து “தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம்” சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

அழகர் கோவில் சாலையில் சாலை மறியல்

போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அழகர் கோவில் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கடும் நெரிசல் ஏற்பட்டது.

போராட்டத்தைக் கலைக்க போலீசார் முயன்றபோது பெண்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை போலீஸ் அதிகாரி கால்களால் மிதித்து அடக்க முயன்றதாகக் கூறப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின.

காவல்துறை நடவடிக்கைக்கு கனிமொழி கண்டனம்

புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து காவல்துறையின் செயல்பாடு குறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழியும் போலீஸ் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குற்றவாளியைக் கண்டுபிடிக்க தயங்கிவிட்டு, நீதி கேட்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே அடக்குமுறையால் ஒடுக்கும் ஆட்சியாக இது இருப்பதாக கனிமொழி விமர்சித்துள்ளார். இதற்கிடையே, தமிழ்ச்செல்வன் மரணம் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி, குடும்பத்தினர் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

இதையும் படிங்க: அதிமுகவிற்கு இடைத்தேர்தலில் வந்த முதல் ஆப்பு! சந்திப்பை மறுத்த அன்புமணி? பின்னணியில் இருக்கும் தவெக... தலைகீழாக மாறிய இடைத்தேர்தல் ஆட்டம்..!!!