2 தொகுதிகள்… 3 முக்கிய தலைவர்கள்! இடைத்தேர்தலுக்கு திமுகவின் அதிரடி பிரச்சார வியூகம்!



By election DMK appointed administratives

தாராபுரம், மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இரு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வரும் 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 25-ம் தேதி முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் இரு தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இடைத்தேர்தல் களம் வரும் நாட்களில் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

dmk

இரு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக திமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மதுராந்தகம் தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தாராபுரம் தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் சாமிநாதன் மற்றும் இல.பத்மநாபன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: ஜெயலலிதா குறித்து ஸ்டாலின் பேசிய வீடியோ.. திமுகவின் ஆபாச பாரம்பரியம்! – தவெக கடும் தாக்கு!

இவர்கள் தலைமையில் தொகுதி வாரியாக தேர்தல் பணிகள் மற்றும் பிரச்சார ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. திமுகவின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்த நாட்களில் பிரச்சார களத்தில் இறங்க உள்ளதால், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் அரசியல் களம் மேலும் பரபரப்படையும் சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: தவெகவை எதிர்கொள்ள அதிமுக அதிரடி! மதுராந்தகம்–தாராபுரத்திற்கு வேட்பாளர்கள் ரெடி!