#BREAKING : பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா காலமானார்!



Solomon papaiya passed away

பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். 

தமிழ் பட்டிமன்ற உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் சாலமன் பாப்பையா (வயது 90) தனது எளிமையான பேச்சு, நகைச்சுவை கலந்த அணுகுமுறை மற்றும் ஆழமான தமிழ் அறிவால் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். மதுரையைச் சேர்ந்த சாலமன் பாப்பையா, அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

அதன் பின்னர் பட்டிமன்ற நடுவராகவும், பேச்சாளராகவும் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். ஆயிரக்கணக்கான பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள அவர், தமிழ் இலக்கியத்தையும் சமூகக் கருத்துகளையும் எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் முக்கியப் பங்காற்றினார். அவரது தமிழ் பணியைப் பாராட்டி 2021ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. மேலும் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: 8 -ஆம் வகுப்பு மாணவிக்கு அத்துமீறிய பாலியல் வன்கொடுமை! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி... கர்ப்பத்துக்கான காமக்கொடூரன் யார் தெரியமா? பகீர் சம்பவம்!!!

சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும், அவரை நேசித்த தமிழ் மக்களுக்கும் பெரும் இழப்பாக அமைந்துள்ளது. அவரது மறைவுக்கு தமிழ் அறிஞர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பெத்த அப்பாவே மகளுக்கு செய்யுற காரியமா இது? வீட்டை எதிர்த்து காதல் திருமணம்! தம்பதிகள் மீது தகப்பன் செய்த வெறிச்செயல்... கொடூர சம்பவம்!!!