அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
பெத்த அப்பாவே மகளுக்கு செய்யுற காரியமா இது? வீட்டை எதிர்த்து காதல் திருமணம்! தம்பதிகள் மீது தகப்பன் செய்த வெறிச்செயல்... கொடூர சம்பவம்!!!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே, பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த ஆகாஷ் (23), சுஷ்மிதா (21) ஆகியோர் காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு பாவூர்சத்திரம் அருகே தனியாக வீடு எடுத்து இருவரும் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று சுஷ்மிதாவின் தந்தை முருகன், அவர்கள் வசித்து வந்த வீட்டிற்குள் சென்றதாகவும், அங்கு ஆகாஷை அரிவாளால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க முயன்றபோது சுஷ்மிதாவுக்கும் அரிவாள் வெட்டு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதையும் படிங்க: பெண்களிடம் அத்துமீறியதாக புகார்.. களத்தில் இறங்கிய ‘சிங்கப்பெண்’ போலீஸ்!

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், ஆகாஷ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. சுஷ்மிதாவுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சுஷ்மிதாவின் தந்தை முருகனை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து, தாக்குதலுக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Ex மினிஸ்டரின் மகன் குத்திக்கொலை.. சொந்தங்களுக்குள் நடந்த பஞ்சாயத்தில் பயங்கரம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு.!