Ex மினிஸ்டரின் மகன் குத்திக்கொலை.. சொந்தங்களுக்குள் நடந்த பஞ்சாயத்தில் பயங்கரம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு.! 



Former Minister’s Son Stabbed to Death Over Property Dispute in Pudukkottai; Relative Arrested

சொத்து பிரச்சனையில் முன்னாள் அமைச்சரின் மகன் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது. 

முன்னாள் அமைச்சர்: 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடாசலம். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவார். இவர் மறைந்துவிட்ட நிலையில், இவரின் முதல் மனைவிக்கு ராஜபாண்டி என்ற 42 வயது மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இரண்டாவது மனைவிக்கு ராஜராஜன் என்ற 38 வயது மகனும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். ராஜபாண்டி தற்போது அதிமுக அம்மா பேரவை மாநில இணைச்செயலாளராக இருக்கிறார். 

இதையும் படிங்க: ஆண் குழந்தையை பிரசவித்த 10ம் வகுப்பு மாணவி.. விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.. திருச்சியில் பேரதிர்ச்சி.! 

தகராறு: 

இதனிடையே, ராஜபாண்டிக்கும் - ராஜராஜனுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்னதாக வடகாடு பகுதியில் இருக்கும் ராஜபாண்டியின் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஓட்டு வீட்டை ராஜராஜனுக்கு பிரித்து கொடுத்துள்ளனர். ஆனால், அந்த வீட்டில் அவரை இருக்கவிடாமல் குடும்பத்தினர் வெளியே தள்ளி வீட்டின் கதவை பூட்டி இருக்கின்றனர். இதனால் ராஜராஜன் மற்றும் அவரின் மனைவி, குழந்தைகள் வீடில்லாமல் தவித்து வந்துள்ளனர். 

Crime news

விசாரணை: 

பின் இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என பல இடங்களில் புகார் அளித்தும் தீவு கிடைக்கப்படவில்லை. இதனால் ராஜராஜனின் மனைவி, குழந்தைகள் தற்போது ராஜராஜனின் மனைவியின் தயார் வீட்டில் வசித்து வருகிறார்கள். சொத்து பிரச்சனை குறித்த வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னதாக நீதிமன்றம் ராஜராஜனுக்கு வழங்கப்பட்ட வீட்டை அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. 

ஒப்படைப்பு: 

இதனால் காவல்துறையினர் சாவியை வாங்கி ராஜராஜனிடம் கொடுத்த நிலையில், சாவியை பெற்றுக்கொண்டவர் வீட்டினை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அச்சமயம், அங்கு வந்த ராஜபாண்டி தனது வீட்டில் என்ன செய்துகொண்டு இருக்கிறாய்? என கேள்வி எழுப்பி ராஜராஜனை கத்தியால் குத்திக்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவரிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில், ராஜபாண்டி விரட்டிச் சென்றுள்ளார். 

Crime news

கொலை: 

உயிர் பயத்தில் ராஜராஜன் அப்பகுதியில் இருக்கும் ராமலிங்கம் என்பவரின் வீட்டுக்குள் சென்று ஒளிந்துகொள்ள, அங்கு சென்ற ராஜபாண்டி ராஜராஜனை கத்தியால் குத்திக்கொலை செய்தார். மேலும், வீட்டில் இருந்த சிலிண்டரை எடுத்து தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்தார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. ராஜபாண்டியின் மனைவி கவிதா முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இதையும் படிங்க: துணி காய வைப்பதில் தகராறு.. பெண் ஹெல்மட்டால் அடித்துக்கொலை.. சென்னையில் அதிர்ச்சி.!