தவெகவை எதிர்கொள்ள அதிமுக அதிரடி! மதுராந்தகம்–தாராபுரத்திற்கு வேட்பாளர்கள் ரெடி!



by-election-admk-candidate-announce

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, மதுராந்தகம் (தனி) தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. கணிகா சம்பத்தும், தாராபுரம் (தனி) தொகுதியில் வழக்கறிஞர் உமா சங்கரியும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் தேர்தல் களத்தில் வலுவான போட்டியை உருவாக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் கணிகா சம்பத் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அதேபோல், தாராபுரம் தொகுதியில் களமிறக்கப்பட உள்ள உமா சங்கரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமி வின்சென்டின் மகள் மற்றும் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இடைத்தேர்தல் களம் சூடுபிடிப்பு..  கூட்டணியை வலுவாக்கும் அதிமுக.. பாரிவேந்தரிடம் ஆதரவு கோரிக்கை!

Admk

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அந்த எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனால், தங்களது தொகுதிகளை மீண்டும் கைப்பற்றும் முனைப்புடன் அதிமுக களமிறங்குகிறது. 

இதனிடையே, மதுராந்தகத்தில் திமுக சார்பில் ஐ.பரந்தாமனும், தாராபுரத்தில் எஸ்.சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தவெக சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இரு தொகுதிகளிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது

இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... அதிமுக- விலிருந்து விலகிய முக்கிய புள்ளி! அடுத்த அதிர்ச்சியில் எடப்பாடி...!!!