குழந்தை யாருக்கு பிறந்தது?.. மனைவி மீது சந்தேகம்.. 3 மாத குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!



Husband killed baby doubt in wife

குஜராத்தின் மஹிசாகர் மாவட்டத்தில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 3 மாத ஆண் குழந்தையை தந்தையே கிணற்றில் வீசியதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிஷ் பூரியா – ஹினாபென் தம்பதிக்கு லவியான்ஷ் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று ஹினாபென், குழந்தையை குளிப்பாட்டிவிட்டு கட்டிலில் தூங்க வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆஷிஷுக்கும் ஹினாபெனுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில், ஹினாபென் தனது தாய் வீட்டுக்குச் சென்று சிலருடன் செல்போனில் பேசியது தொடர்பாக ஆஷிஷ் கோபமடைந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குவாதத்தின்போது, மனைவியின் நடத்தையை ஆஷிஷ் சந்தேகித்ததாகவும், குழந்தையின் தந்தை யார் என கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கணவனுக்கு மரண வலை; காதலனுடன் சேர்ந்து மனைவி அரங்கேற்றிய ‘விபத்து’ நாடகம்! அம்பலமான அதிர்ச்சி பின்னணி!

husband and wife

இதையடுத்து ஆத்திரமடைந்த அவர், தூங்கிக் கொண்டிருந்த 3 மாத குழந்தையை தூக்கிச் சென்று அருகிலிருந்த கிணற்றில் வீசியதாக புகார் கூறுகிறது. கிணற்றில் விழுந்த குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தந்தையின் செயலுக்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: “சமையல் செய்ய மாட்டியா?” – மனைவியுடன் தகராறு.. மகாராஷ்டிராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!