கணவனுக்கு மரண வலை; காதலனுடன் சேர்ந்து மனைவி அரங்கேற்றிய ‘விபத்து’ நாடகம்! அம்பலமான அதிர்ச்சி பின்னணி!



Wife killed drink husband in uttarpradesh

உத்தரப் பிரதேச மாநிலத்திலத்தில் கணவனை கொலை செய்வதற்காக மனைவி தனது காதலனுடன் இணைந்து திட்டமிட்டு, கொலையை சாலை விபத்து போல சித்தரித்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிச்சந்திர அகர்கரி கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பூரி ராப்தி நதிக்கரையில் அவரது உடல் மற்றும் ஈ-ரிக்‌ஷா மீட்கப்பட்டதால், முதலில் இது சாலை விபத்தாக இருக்கலாம் என போலீசார் கருதினர்.

UttarPradesh

ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஹரிச்சந்திரா கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்காக விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த விசாரணையில், ஹரிச்சந்திரா மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், இதனால் அடிக்கடி தனது மனைவி மாயா தேவியை துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மனைவியுடன் தகாத உறவு... நள்ளிரவில் வெடித்த தகராறு! அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பி கைது

இதனையடுத்து கணவனின் தொல்லையில் இருந்து விடுபட முடிவு செய்த மாயா தேவி, தனக்கு நெருக்கமான நியாஸ் அகமது என்பவருடன் இணைந்து கொலைத் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இதற்காக மேலும் சிலரின் உதவியை நாடிய இருவரும், ஹரிச்சந்திராவை கொலை செய்ய ரூ.1.10 லட்சம் பேசி ஆட்களை ஏற்பாடு செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

UttarPradesh

இந்நிலையில் சம்பவத்தன்று சவாரிக்கு அழைத்துச் செல்வது போல் ஹரிச்சந்திராவின் ஈ-ரிக்‌ஷாவை எடுத்துச் சென்ற கும்பல், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், கொலையை விபத்து போல் காட்டுவதற்காக அவரது உடலையும் ஈ-ரிக்‌ஷாவையும் நதியில் தள்ளியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் மாயா தேவி, நியாஸ் அகமது உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: “சமையல் செய்ய மாட்டியா?” – மனைவியுடன் தகராறு.. மகாராஷ்டிராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!