மனைவியுடன் தகாத உறவு... நள்ளிரவில் வெடித்த தகராறு! அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பி கைது



Illegal affair brother killed in Krishnagiri

உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிண்டு (35), தனது மனைவி பிரபாவதி (30), 4 குழந்தைகள் மற்றும் தம்பி ராஜேஷ் (20) ஆகியோருடன் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜார்க்கலட்டி கிராமத்தில் உள்ள பூந்தோட்டத்தில் தங்கி விவசாயக் கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், பிண்டுவின் மனைவி பிரபாவதிக்கும், அவரது தம்பி ராஜேஷுக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு பிண்டு மீண்டும் ஜார்க்கலட்டிக்கு திரும்பியுள்ளார்.

அப்போது நள்ளிரவில் பிண்டுவுக்கும், ராஜேஷுக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ராஜேஷ் கத்தியால் பிண்டுவின் மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கள்ளக்காதல் ஆசையால் கணவருக்கு சமாதிகட்டிய மனைவி.. கொன்று புதைத்த பயங்கரம்.! 

UttarPradesh

இதில் படுகாயமடைந்த பிண்டு, மருத்துவமனைக்குச் செல்லாமல் தானாகவே காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டு தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்காததால், குடும்பத்தினர் பார்த்தபோது மூச்சுப் பேச்சின்றி கிடந்துள்ளார்.

இதையடுத்து பிண்டுவை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே அண்ணனை கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படும் ராஜேஷை கைது செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உல்லாச வாழ்க்கைக்கு இடையூறு.. கணவர், 4 வயது மகன் கொலை.. இளம்பெண்ணின் அதிர்ச்சி செயல்.!