எவ்வளவு கூட்டம்... இப்படியா ரயிலில் தொங்கிட்டு போறது! ஓடும் லோக்கல் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த பெண்! பகீர் வீடியோ..!!!



dombivli-local-train-woman-falls-on-track

தானே அருகே திவா - மும்ப்ரா ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ளூர் ரயிலில் இருந்து பெண் பயணி ஒருவர் தண்டவாளத்தில் தவறி விழுந்தார். காலை நேர அலுவலக நெரிசலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.

டோம்பிவ்லியிலிருந்து காலை 7.56 மணிக்கு புறப்பட்ட உள்ளூர் ரயிலில் வழக்கம்போல் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ரயில் சிக்னலுக்காக அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தபோது, பெட்டிக்குள் ஏற்பட்ட கடும் நெரிசலில் நிலைகுலைந்த பெண் பயணி எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததாக தகவல் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: பயணி போல ஏறி படகில் சவாரி சென்ற குரங்கு! அதுக்குள்ள என்ன அவசரம்ன்னு தெரியல... ஆற்றில் குதித்து அது செஞ்ச வேலையை பாருங்க! வைரல் வீடியோ...!!!

நெரிசலில் நிலைதடுமாறிய பெண் பயணி

அவர் தண்டவாளத்தில் விழுந்ததைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சில நொடிகளில் அங்கிருந்தவர்கள் உதவிக்கு விரைந்தனர். கூட்ட நெரிசலால் ஏற்பட்ட நிலைதடுமாற்றமே அவர் கீழே விழுந்ததற்குக் காரணமாக கூறப்படுகிறது.

உடனடியாக மீட்பு

இதையடுத்து பெண் பயணி உடனடியாக மீட்கப்பட்டார். நல்லவேளையாக அவருக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நிலை எதுவும் ஏற்படவில்லை. உள்ளூர் ரயில் நெரிசல் நேரத்தில் பயணிகள் பாதுகாப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த காட்சி மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.

 

இதையும் படிங்க: திக் திக் நிமிடம்.... திடீரென சாலையை நோக்கி ஓடிய சிறுமி! நொடிப் பொழுதில் கடவுள் ரூபத்தில் வந்த கடைக்காரார்...... பதறவைக்கும் காட்சி..!!!