திக் திக் நிமிடம்.... திடீரென சாலையை நோக்கி ஓடிய சிறுமி! நொடிப் பொழுதில் கடவுள் ரூபத்தில் வந்த கடைக்காரார்...... பதறவைக்கும் காட்சி..!!!



mexico-man-saves-girl-from-car

மெக்சிகோவில் சாலையை நோக்கி சென்ற சிறுமியை, கார் மோதுவதற்கு சில நொடிகளுக்கு முன் ஒருவர் ஓடிச்சென்று காப்பாற்றிய காட்சிகள் வெளியாகியுள்ளன. அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சரியான நேரத்தில் அவர் எடுத்த நடவடிக்கை சிறுமியை பெரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது.

சாலையை நோக்கி சென்ற சிறுமி

வீதியோரத்தில் ஒருவர் தனது கடை வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் திரும்பிப் பார்த்தபோது, ஒரு சிறுமி மெதுவாக சாலையை நோக்கி செல்வதை கவனித்தார். குழந்தை எதை நோக்கிச் செல்கிறாள் என்பது தெரியாமல் இருந்த நிலையில், ஆபத்தை உணர்ந்த அந்த நபர் உடனடியாக அவளை நோக்கி ஓடினார்.

இதையும் படிங்க: வெறும் 2 நொடிக்குள் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற ஓடோடிய தாய்! வெள்ளத்தில் தாய்மை நடத்திய வீரப் போராட்ட வீடியோ..!!!

அதே நேரத்தில் அருகில் இருந்த ஒரு பெண்ணும் சிறுமியைத் தடுக்க ஓடிவந்தார். ஆனால், குழந்தையை நெருங்குவதற்கு முன்பே அவர் தடுமாறி சாலையில் விழுந்தார். இதனால் சிறுமியைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பு அந்த நபரின் மீது விழுந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த மீட்பு

அடுத்த சில நொடிகளில் நிலைமை பதற்றமாக மாறியது. சிறுமி சாலைக்குள் சென்று கொண்டிருக்க, எதிரே ஒரு கார் வந்து கொண்டிருந்தது. குழந்தையை பார்த்த ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட முயன்றார். ஆனால் கார் அருகில் வந்து கொண்டிருந்த நேரத்தில், அந்த நபர் சிறுமியை அடைந்துவிட்டார்.

அவர் குழந்தையைப் பிடித்து சாலையிலிருந்து இழுத்து பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வந்தார். அந்த முயற்சியில் இருவரும் கீழே விழுந்தனர். உடனே எழுந்த அவர், சிறுமியை அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்து, குழந்தை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தார். அந்த சில வினாடிகளில் நடந்த துரிதமான மீட்பு நடவடிக்கைதான் பெரிய ஆபத்தைத் தவிர்க்க உதவியது.

பாராட்டுக்காக காத்திருக்காமல் கடைக்குத் திரும்பினார்

சிறுமி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த பிறகு, அந்த நபர் அங்கேயே நின்று கொண்டிருக்கவில்லை. யாராவது தன்னை பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவரிடம் இல்லை. வழக்கம்போல் தனது கடைக்குத் திரும்பி மீண்டும் வேலையைத் தொடர்ந்தார்.

சிசிடிவி காட்சிகளைப் பார்த்த பலரும் அவரது செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அவர் அந்த நேரத்தில் திரும்பிப் பார்க்காமல் இருந்திருந்தாலோ, சில வினாடிகள் தாமதித்திருந்தாலோ நிலைமை வேறு விதமாக மாறியிருக்கலாம். ஆபத்தை கவனித்தவுடன் தயங்காமல் செயல்பட்டதே அந்த சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய தருணமாக அமைந்துள்ளது.

 

இதையும் படிங்க: ஐயோ... எனக்கு பின்னால் கேட்கும் அந்த சத்தம்? நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி..!!!