மாமனாரை தீர்த்து கட்ட மருமகள் போட்ட மாஸ்டர் பிளான்! கொலை மாதிரி தெரியக்கூடாது.... மாரடைப்பு போலக் காட்டனும்..! கடைசியில் நடந்த பெரிய ட்விஸ்ட்.. வசமாக சிக்கிய கோடீஸ்வர மருமகள்!!!



kanpur-businessman-vineet-minosa-murder-shalu-minosa-di

கான்பூரைச் சேர்ந்த கோடீஸ்வர மருந்து தொழிலதிபர் வினீத் மினோசா கொலை வழக்கில், அவரது மருமகள் ஷாலு மினோசா தொடர்பாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலைக்கு முன்பு அவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் Google Search History மற்றும் மொபைல் சாட்டுகளை போலீசார் ஆய்வு செய்ததில் முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஷாலு உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாரடைப்பு போல காட்ட திட்டமிட்டதாக குற்றச்சாட்டு

கல்யாண்பூர் காவல் துறையினரின் விசாரணையில், வினீத் மினோசாவை இயற்கையாக உயிரிழந்தது போல் காட்டுவதற்கு ஷாலு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஒருவரை கொலை செய்துவிட்டு அதை தற்கொலை அல்லது மாரடைப்பு போல எப்படி காட்டுவது என்பது தொடர்பாக அவர் கூகுளில் தேடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: காட்டுக்குள் கண்டப்படி கிடந்த கணவன், மனைவியின் சடலம் .! விசித்திரக் கோலத்தில் கணவன்... மனைவியின் அரைநகன் உடல்..! பின்னணி என்ன? பகீர் சம்பவம்...!!!

மேலும், தனது மாமனாரை சந்தேகம் வராத வகையில் கொலை செய்ய வீட்டில் பணியாற்றிய பழைய வேலைக்காரருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுப்பதாக ஷாலு ஆசை காட்டியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. ஆனால் திட்டமிட்டபடி கொலை நடைபெறவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை எதிர்த்து போராடிய வினீத்

வேலைக்காரர் விஷால் மற்றும் அவரது நண்பர் தாக்குதல் நடத்தியபோது வினீத் எதிர்த்து போராடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் அவரை கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை நடந்த இரவில் வினீத்தின் மகனும் ஷாலுவும் பார்ட்டியில் இருந்ததாகவும், அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிய பின்னரே வினீத் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.

குடும்பத் தகராறில் உருவான கொலைத் திட்டம்?

விசாரணையில் குடும்பத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த பிரச்சினைகள் கொலைக்கான முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஷாலுவின் அதிகப்படியான செலவுகளை வினீத் கண்காணித்து கண்டித்ததாகவும், அவர்மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக வீட்டில் பல சிசிடிவி கேமராக்களை பொருத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி கொலைத் திட்டத்திற்கு வழிவகுத்ததாக போலீசார் கருதுகின்றனர்.

வழக்குப்பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றச்செயலுடன் தொடர்புடையவர்களை போலீசார் கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது Digital Evidence ஆக சேகரிக்கப்பட்டுள்ள கூகுள் தேடல் விவரங்கள் மற்றும் மொபைல் சாட்டுகளை வழக்கின் முக்கிய ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: உயிர் முக்கியமா..? இல்ல பெட்ரோலா..? எந்த நிமிஷமும் வெடிக்கலாம்? லாகோஸில் கவிழ்ந்த பெட்ரோல் டேங்கர் லாரி..! உயிரைப் பணையம் வைத்து பெட்ரோலை அள்ளும் மக்கள் கூட்டம்...! அதிர்ச்சி வீடியோ...!!!