என் சொந்த செலவுல கட்டி தர்றேங்க!! தொகுதி மக்களின் மனதில் இடம் பிடித்த கதிர் ஆனந்த்..kathir-anand-promise-to-build-a-marriage-hall-in-own-mo

தனது சொந்த செலவில் திருமண மண்டபம் கட்டித்தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார் திமுக வேலூர் தொகுதி வேட்பாளர் திரு. கதிர் ஆனந்த் அவர்கள்.

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளநிலையில், அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு. கதிர் ஆனந்த் அவர்கள் தனது தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

Kathir Anand

கடந்த முறை இதே தொகுதியில் வெற்றிபெற்ற அவர் தனது தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துகொடுத்துள்ளார். குறிப்பாக ஆம்பூர் மேம்பாலம் அமைய கதிர் ஆனந்த் எடுத்த முயற்சிகள் அந்த தொகுதி மக்களாலையே வெகுவான பாராட்டுகளை பெற்றது. அதேபோல் இளைஞர்கள், இளம் பெண்கள் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற கதிர் ஆனந்த் பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

இதனால் வேலூர் தொகுதி மக்களிடையே கதிர் ஆனந்த் அவர்களுக்கு பெரிய வரவேற்பு உள்ளது. இதனால், இந்தமுறையும் அவரே அந்த தொகுதியில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது தொகுயில் உள்ள அணைக்கட்டு தொகுதி பீஞ்சமந்தை பகுதியில்  இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கதிர் ஆனந்த் அவர்கள், வரும் தேர்தலில் தன்னை வெற்றிபெற செய்தால், தனது சொந்த செலவில் அணைக்கட்டு தொகுதி பீஞ்சமந்தையில் திருமண மண்டபம் கட்டித்தருவதாக தொகுதி மக்களுக்கு வாக்கு கொடுத்துள்ளார்.