அரசியல் இந்தியா

காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக பிரபல நடிகையை ராகுல் காந்தி நியமித்துள்ளார்.

Summary:

kankiras katchi - natchaththira pechalar - vijayashanthi

தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் ஆளும் பாஜக அரசு அடுத்த 5  ஆண்டிலும் ஆட்சியை  பிடித்து ஆளும் நோக்கோடு தனது அரசியல் நகர்வுகளை ஒவ்வொரு நாளும் நேர்த்தியாக நகர்த்தி  கொண்டிருக்கிறது.  இந்நிலையில்  வரும்  நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை தோற்கடித்து அவர்களின்  நோக்கத்தை முறியடிக்கும் விதமாக எதிர்க்கட்சியான காங்கிரஸ்  இதர கட்சிகளை ஒருங்கிணைத்து அதன் தலைவர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கூட்டங்களையும் பல்வேறு வழிமுறைகளையும் கடைபிடிக்க திட்டமிட்டுக்  கொண்டிருக்கிறார்கள்.

இதன் ஒரு தொடர்ச்சியாக தற்போது தெலுங்கானா மாநில சட்ட சபை கலைக்கப்பட்டு அங்கு விரைவில் விரைவில் தேர்தல் வர இருக்கிறது.  இதனை முன்னிட்டு அங்கு காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தோடு  தெலுங்கானா காங்கிரஸில் 10 குழுக்களை அமைத்துள்ளது தேசிய காங்கிரஸ் . அதில் நடிகை விஜயசாந்திக்கு, நட்சத்திர பிரச்சார பேச்சாளர் பொறுப்பு வழங்கி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். மேலும் அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக் குழுவின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

Image result for vijayashanthi

இதேபோல் தெலுங்கானா காங்கிரஸ் கட்சியின் பல்வேறு குழுக்களில் விஜயசாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானாவில் உள்ள முக்கிய தலைவர்களை ஒருங்கிணைத்து, 15 நபர்கள் கொண்ட குழுவை ராகுல் காந்தி உருவாக்கியுள்ளார்.


 


Advertisement