நீங்களா நாங்களா பார்ப்போம்...! ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க முடியாது! மக்கள் பணம் ரூ.1,200 கோடி... மாற்று வலியை தேடுங்க! புதிய தலைமைச் செயலக திட்டத்திற்கு ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு...!!!



jayakumar-opposes-new-secretariat-pattinapakkam

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 15 மாடிகளுடன் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேவையில்லாத செலவை அரசு தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பட்டினப்பாக்கம் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜெயக்குமார், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார். அங்கு ஒரு செங்கலைக்கூட எடுத்து வைக்க முடியாது எனக் கூறிய அவர், புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: நீங்க பேசுங்க... விஜய் சேதுபதிக்கு ஆதரவா நாங்க நிற்ப்போம்! CM விஜய்கு எதிராக களத்தில் இறங்கிய அதிமுக...!!!

ஓமந்தூரார் வளாகம் குறித்து ஜெயக்குமார் கருத்து

இதனிடையே, தலைமைச் செயலகத்தை மீண்டும் ஓமந்தூரார் அரசு வளாகத்திற்கு மாற்றுவது தொடர்பான கேள்விக்கும் அவர் பதிலளித்தார். தற்போது அந்த வளாகத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருவதால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பயன்பாட்டில் உள்ள மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றுவது பொருத்தமானதாக இருக்காது என அவர் கூறினார்.

மாற்று வழிகளை பரிசீலிக்க வலியுறுத்தல்

அரசு மக்கள் பணத்தை தேவையின்றி செலவிடுவதைத் தவிர்த்து, தலைமைச் செயலகத்திற்கான மாற்று வழிகளை பரிசீலிக்க வேண்டும் என்றும் டி.ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார். ரூ.1,200 கோடி திட்டம் தொடர்பாக அவரது எதிர்ப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: எடப்பாடிக்கு எதிராக வேலுமணி போடும் ரகசிய பிளான்! இடைத்தேர்தலில் இபிஎஸ்ஸுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி... அதிமுகவை அடியோடு தூக்கப்போகும் முதல்வர் விஜய்!!!