தொண்டரின் ஆவேசமான கேள்வி - தவறை ஒப்புக்கொண்ட உதயநிதி ஸ்டாலின்

தொண்டரின் ஆவேசமான கேள்வி - தவறை ஒப்புக்கொண்ட உதயநிதி ஸ்டாலின்



dmk fellow men asked question about udhayanithi thanjavur

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கடந்த 4-ம் தேதி மாலை கலைஞர் அறிவாலயத்தில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்றது குறித்தும் கட்சியில் அவர் எப்படி வளர்ந்தார் என்பது குறித்தும்  ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்களை எம்.எல்.ஏ-க்கள் பயன்படுத்துவதற்காக கொடுக்கப்படும் தமிழக அரசின் முத்திரையிட்ட லெட்டர் பேடில் எழுதியுள்ளார்கள். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எம்.எல்.ஏ-க்கள் துரை, சந்திரசேகர், ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

இந்தக் கூட்டத்தில் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின்  புகைப்படங்கள் கொண்ட பேனர் ஒன்று மேடையில் வைக்கப்பட்டிருந்தது. 

அதைப் பார்த்த திமுக தொண்டர் ஷாமுராய் என்பவர், ‘மிஸ்டர் உதயநிதி, ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பாக இருக்கு தெரியுமா? உங்களுக்குத் தோணலையா? முன்னணி தலைவர்கள் மேடையில, உங்கள் போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?’ என்று  ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.


அதற்குப் பதிலளித்துள்ள உதயநிதி, ‘தவறு… மீண்டும் நடக்காது’ என ட்விட்டரில் உறுதியளித்துள்ளார்.