சென்னை திரும்பிய முதல்வர் விஜய்கு அடுக்கடுக்காக அதிகாரிகள் அடுக்கிய அந்த ஆவணங்கள்! தலைமைச் செயலகத்தில் விஜய் எடுத்த அந்த ஒரு முடிவு... கலக்கத்தில் மூத்த அதிகாரிகள்..!!!
லண்டன் அரசு முறைப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் விஜய், விமான நிலையத்திலிருந்து நேராக தலைமைச் செயலகம் சென்றார். அங்கு தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் நிலுவையில் இருந்த முக்கிய கோப்புகளை ஆய்வு செய்து, மூத்த அதிகாரிகளுடன் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் சமூக நீதி உறுதிமொழியை வாசித்தார். அவருடன் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் செயலக ஊழியர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் வழக்கமான அலுவல் பணிகளைத் தொடங்கிய முதல்வர், ஒரு வார காலமாக காத்திருந்த அவசரக் கோப்புகளை பரிசீலித்தார்.
இதையும் படிங்க: எலும்பை உடைப்பேன்! நல்ல சாவே வராதா? என்ன பேச்சு இதெல்லாம்... சட்டமன்றத்தில் ஆவேசப்பட்ட முதல்வர் விஜய்...!!!
புதிய தலைமைச் செயலகம் குறித்து ஆலோசனை
பட்டினம்பாக்கம் கடலோரப் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக மீனவ அமைப்புகள் மற்றும் பொதுநல அமைப்புகள் தெரிவித்து வரும் எதிர்ப்பு குறித்து அதிகாரிகள் முதல்வரிடம் விளக்கினர். அப்பகுதியில் இருந்த தவெக கொடிக்கம்பங்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மீனவ மக்களின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் அவர்களது அச்சங்கள் குறித்து முதலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தகவல்களைத் திரட்டிவிட்டு, பின்னர் நேரடியாக சந்தித்து பேசுவது குறித்து முடிவு செய்யலாம் என ஆலோசிக்கப்பட்டது.
அன்பில் மகேஷ், மதுரை கும்பாபிஷேகம் விவகாரங்கள்
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனை, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் தொடர்ந்து நடைபெறும் விசாரணை குறித்தும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கைகளைத் தொடர்வது தொடர்பாக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதுபோல், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகள், ஆகம விதிகள் தொடர்பான புகார்கள், பக்தர்கள் எதிர்கொண்ட சிரமங்கள் மற்றும் சிறப்பு அனுமதிச் சீட்டு வழங்கியதில் எழுந்த பிரச்சினைகள் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். முக்கிய கோப்புகள் மீது சென்னை திரும்பிய உடனேயே அவர் கவனம் செலுத்தியிருப்பது தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லிஸ்ட் ரெடி.... 6 அமைச்சர்களின் பதவி பறிப்பு? CM விஜய் எடுக்கப்போகும் அதிரடி ஆக்க்ஷன்...! கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்!!!