சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மோதிக்கொண்ட தொண்டர்கள்.. தள்ளுமுள்ளு பரபரப்பு.!



Chennai Congress Party Members Fight due to Election Conflict 

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மோதிக்கொண்டனர்.

கூட்டணி ஆட்சி:

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 திமுக தலைமையிலான கூட்டணிக்கு தோல்வியை தந்த நிலையில், அக்கட்சியின் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட விசிக, காங்கிரஸ் உட்பட ஒருசில கட்சிகள் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு தற்போது கூட்டணி ஆட்சியில் பங்கு வகிக்கிறது. 

இதையும் படிங்க: தவெகவுடன் கைகோர்க்கும் மதிமுக? பளிச் பதில் அளித்த வைகோ.!

விவாதத்துக்கு அழைப்பு:

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை தந்தாலும், திமுக கூட்டணியின் தோல்வி என்பது மிகப்பெரிய அளவில் கவனிக்கப்படுகிறது. மேலும், இதுகுறித்து அரசியல் வட்டாரங்களில் ஆலோசனையும் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, காங்கிரசின் தோல்வி குறித்து விவாதம் செய்ய இன்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 

chennai

வடசென்னை நிர்வாகிகள்:

சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு வந்திருந்தது. மாவட்ட வாரியாக தோல்விக்கான காரணம் குறித்து விவாதம் நடந்து இருந்த நிலையில், வடசென்னையை சேர்ந்த இருதரப்பு காங்கிரஸ் நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டனர்.

தள்ளுமுள்ளு:

கட்சியின் மேலிடம் கொடுத்த பணத்தை நிர்வாகிகள் பதுக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டு, பின் வாக்குவாதம் தள்ளுமுள்ளுவாக மாறியது. காவல்துறையினர் மற்றும் கட்சியினர் இவர்களை தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். காங்கிரசின் தொடர் தோல்விக்கு 5 பேர் கொண்ட குழுவை தேசிய தலைமை நியமனம் செய்து இருக்கிறது. 

தேர்தல் முடிவுகள் தொடர்பாக விவாதிக்க அழைப்பு விடுக்கப்பட்ட முதல் நாளே மோதல் சம்பவம் நடைபெற்ற நிலையில், அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: BREAKING : ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கும் திருமாவளவன்! தவெக அமைச்சரவையில் விசிக...! உற்று நோக்கும் திமுக...அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!!